Female infanticide: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பெரியகட்டளை கிராமம். இவ்வூரைச் சேர்ந்த முத்துப்பாண்டி - கௌசல்யா தம்பதிக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை கடந்த 26ஆம் தேதி உயிரிழந்தாக வீட்டின் அருகிலேயே புதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் பெண் சிசு கொலையாக இருக்குமோ என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரிக்கச் சென்றனர். அப்போது பெற்றோர் தலைமறைவாகினர்.