தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மாணவியின் தாயாருக்கு ஜாமின் தள்ளுபடி! - madurai highcourt

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தருமபுரியைச் சேர்ந்த மாணவியின் தாயார் மைனாவதியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்றம்

By

Published : Nov 26, 2019, 8:25 AM IST

தருமபுரியைச் சேர்ந்த மருத்துவ மாணவியின் தாயார் மைனாவதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், ”நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில், கடந்த அக்டோபர் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளேன். 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் 397 மதிப்பெண் பெற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எனது மகள் பயின்றார். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள எனக்கு ஜாமின் வழங்கக் கோரி கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தேனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆகவே எனக்கு ஜாமின் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் எனது உடல்நலம் கருதி ஜாமின் வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ”மனுதாரரின் உடல்நிலை, அவர் குடும்ப சூழ்நிலை மற்றும் அவரது மகளுக்கு திருமணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும். மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்” என்று கூறினார்.

அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ”தற்போது வரை விசாரணை முடிவு பெறவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, முக்கிய குற்றவாளியை கைது செய்யும் வரை ஜாமின் வழங்கக் கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, மாணவியின் தாயாருக்கு ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவரின் விரல் ரேகையை ஒப்பிட்டுப் பார்க்க சிபிசிஐடிக்கு உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details