தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கே என் ஆதரவு - நடிகர் சுமன் - Assembly elections

மதுரை: முதல்வர் பதவி என்பது கடவுள் கொடுக்கும் வரம், அது எல்லோருக்கும் கிடைக்காது என்றும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு என் முழு ஆதரவு தருவேன் என்றும் பிரபல நடிகர் சுமன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சுமன்
நடிகர் சுமன்

By

Published : Jan 18, 2021, 7:28 PM IST

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் சுமன், சினிமாத்துறைக்கு வந்து 43 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் கடுமையாக உழைத்தனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு என் முழு ஆதரவு. அதிமுகவில் சேர்வது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை.

நடிகர் சுமன் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு பாதுகாப்புமிக்க மாநிலமாக திகழ்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநிலத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறும்போது நாம் மற்றொரு முதல்வரை தேர்வு செய்ய வேண்டாம்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்கள்தான் பல மாநிலங்களில் காப்பி அடிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவி என்பது கடவுள் கொடுக்கும் வரம், அது எல்லோருக்கும் கிடைத்துவிடாது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details