மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், "பாஜக இந்தியா முழுவதும் மிக வேகமாக பரப்புரை செய்து வருகிறது. கண்டிப்பாக பாஜக தனிப்பெருபான்மையுடன் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும். 300க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெரும். தமிழ்நாட்டில் வெற்றி எப்படி இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பாஜக தனி பெருபான்மையுடன் ஆட்சி அமைக்கும் - முரளிதரராவ் நம்பிக்கை - பெருபான்மையுடன் ஆட்சி
மதுரை: பாஜக தனி பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு வெவ்வேறு கூட்டணிகளுடன் சேர்ந்து 19 விழுக்காடு வாக்குகளைப் பெற்றோம். தென்னிந்தியாவில் முக்கிய மாநிலம் தமிழ்நாடு, இம்முறை தமிழ்நாட்டில் இருந்து அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பவுள்ளோம். அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் முழு எழுச்சி பெற்றுள்ளது. திமுக - காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள், இந்திய அளவிலும், தமிழ்நாடு அளவிலும், மக்களிடம் இவர்கள் தான்தலைமைஎன்று கொண்டு செல்ல முடியாமல் இருக்கிறது. நாடும் நமதே; நாற்பதும் நமதே என்பது பாஜகவின் நோக்கம் மற்றும் லட்சியமாக உள்ளது" என தெரிவித்தார்.