மதுரை மாநகராட்சி ஆணையாளராக சிம்ரன்ஜித் சிங் காலோன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பதவியேற்று தற்போது பணிபுரிந்து வருகிறார். இவர் நாள்தோறும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகள் குறித்து நேரடி ஆய்வு செய்வதோடு, பணி விவரங்கள் குறித்து அவ்வப்போது மாநகராட்சி மண்டல, இணை மற்றும் துணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திவருகிறார்.
இந்நிலையில் ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் பெயரில் போலியான வாட்ஸ்அப் எண் கணக்கு தொடங்கி அதன் மூலமாக மர்ம நபர் ஒருவர் உதவி ஆணையாளர்களுக்கு தனிதனியாக மெசேஜ் அனுப்பி அதன் மூலமாக பணம் வேண்டும் என அனுப்பியுள்ளார். இதனை நம்பி சிலர் பணத்தை அனுப்பி ஏமாற்றமடைந்துள்ளனர். சிலர் நேரடியாக ஆணையாளரை தொடர்பு கொண்டு பணம் குறித்து சில அதிகாரிகள் கேட்டுள்ளனர்.