'மோடி ஒரு சாடிஸ்ட்.. எடப்பாடி பழனிசாமி ஒரு உதவாக்கரை..! - ஸ்டாலின் காட்டம் - ஒரு உதவாகரை
மதுரை: மோடி ஒரு சாடிஸ்ட்.. எடப்பாடி பழனிசாமி ஒரு உதவாக்கரை.. என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து விளாச்சேரியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே போஸ் மறைந்ததால்தான் இடைத்தேர்தல் நடக்கிறது. மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கான பிரதமர் அல்ல, அவர் வெளிநாடுவாழ் பிரதமர். அவர் மக்கள் குறித்து கவலைப்படாத ஒரு சாடிஸ்ட். தமிழ்நாட்டை ஆட்சி செய்கின்ற எடப்பாடி பழனிச்சாமி ஒரு உதவாக்கரை" என்று காட்டமாக விமர்சித்தார்.