திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது. ’'கருணாநிதி இறந்தபோது அண்ணா சமாதி அருகே அவருக்கு 6 அடி நிலம் தருவதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுத்தார். அதை நீதிமன்றத்தின் மூலம் முறியடித்து கருணாநிதிக்கு சமாதி அமைத்தோம் என உருக்கமாகக் கூறினார்.
ஓபிஎஸ் போன்று நடித்துக் காட்டிய ஸ்டாலின்; தேர்தல் பரப்புரையில் ருசிகரம்! - Stalin
மதுரை: தேர்தல் பரப்புரையின்போது துணை முதலமைச்சர் ஓபிஎஸ் போன்று மு.க ஸ்டாலின் நடித்துக்காட்டியது தொண்டர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய அவர், ‘முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ்தான் கூறினார். தனது முதலமைச்சர் பதவிக்கு வேட்டு வந்துவிட்டது என்பதை அறிந்து, திடீரென ஜெ.வின் சமாதிக்குச் சென்ற 40 நிமிடம் தியானம் மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது அம்மாவின் ஆவியோடு பேசியதாகக் கூறினார்’ என ஓபிஎஸ் தியானம் செய்ததை நடித்துக் காட்டி ஸ்டாலின் கிண்டல் செய்தார். அவது நக்கல் பேச்சால் பரப்புரைக் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் எழுந்த சிரிப்பலை ஓய சிறிது நேரம் எடுத்துக் கொண்டது.