மதுரை:மதுரை சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவர் விடுதியை, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று (ஜூலை 24) ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் வாழும் இலங்கை அகதிகளுக்காக, அவர்களது முகாமில் புதிய வீடுகளைக் கட்டித்தர தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதிமுக சரியாக ஆட்சி செய்யாததால், மக்கள் திமுகவை தேர்வு செய்துள்ளனர்.
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுத்தர சிறப்புகுழு அமைப்பு
கடந்த இரண்டு மாதங்களில், வெளிநாடுகளில் 32 தமிழர்கள் இறந்துள்ளனர், அவர்களில் 30 பேரின் உடல்கள் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 13 ஆயிரத்து 553 இலங்கை அகதிகளின் குடும்பங்கள், அகதிகள் முகாமுக்கு வெளியே வசித்து வருகின்றன.