தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திய ரயில்வே துறை மோடியின் கண்காணிப்பில் சிறப்பாக இயங்குகிறது- அமைச்சர் செல்லூர் ராஜூ - செல்லூர் ராஜூ

மதுரை: இந்தியாவில் ரயில்வே துறை மோடி அவர்களின் தலைமையில் கண்காணிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ

By

Published : Mar 8, 2019, 11:27 PM IST

அமைச்சர் செல்லூர் ராஜூ

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ரயில் நிலையமாக விளங்கக் கூடிய மதுரை ரயில் நிலையத்தை இந்தியாவிலேயே இரண்டாவது அழகிய ரயில் நிலையம் என மத்திய அரசு சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது.இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்தை, மேலும் அழகுபடுத்துவதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மத்திய ரயில்வேத் துறைரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.நவீன தங்கும் விடுதி, நடைமேடைகள் என பல்வேறு பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது, "மதுரை ரயில் நிலையத்திற்கு முதல் கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரூ.7 கோடி மதிப்பிலான பணிகள் விரைவில் முடியும் தருவாயில் உள்ளது. மதுரையில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு சுமார் 58 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மதுரை ரயில் நிலையத்தை தினசரி 50 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறை மோடியின் தலைமையில் கண்காணிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவே மோடி அவர்களுக்கு நன்றி", என்றார்.

ABOUT THE AUTHOR

...view details