தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தேர்தல் நெருங்குவதால் வேல்கூட குத்துவார்’: ஸ்டாலின் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்

மதுரை: திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் நெருங்குவதால் வேல்கூட குத்துவார்; கபடவேடதாரியான அவர் ஒருபோதும் முதலமைச்சர் ஆக முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

minister sellur raju
அமைச்சர் செல்லூர் ராஜு

By

Published : Jan 24, 2021, 9:46 PM IST

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரும் 27ஆம் தேதி சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்க உள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது; ’தேர்தல் வந்துவிட்டால் திமுக தலைவர் முக ஸ்டாலின் வேல் வாங்குவது மட்டும் அல்ல; வேல் குத்த கூட செய்வார். அம்மனுக்கு தீ மிதிப்பார். தேர்தல் முடிந்த பிறகு பகுத்தறிவு பேசுவார். பசும் பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வழங்கிய விபூதியை வாங்கி கீழே கொட்டியவர் ஸ்டாலின். அவர் ஒரு கபடவேடதாரி. ஒரு நாளும் அவரால் முதலமைச்சர் ஆக முடியாது’ என்றார்.

அதிமுக கூட்டணியில் இருக்கும் பிரேமலதா விஜயகாந்த் பேசியது குறித்து எழுப்பிய கேள்விக்கு, ’அவர் (பிரேமலதா) தனது சொந்த கருத்தை கூறுகிறார். கூட்டணியில் உள்ளவர்களை இப்படி பேசுங்கள் என வலியுறுத்தமுடியாது. குங்குமம் கொடுத்தால் அழிப்பது, விபூதி கொடுத்தால் தூக்கி எறிவது, இது போன்ற செயலை மக்களும், கடவுளும் ஏற்க மாட்டார்கள். தை பூசத்திற்கு விடுமுறை, அனைத்து மதத்தினருக்கு தேவையான நலத்திட்டங்கள் செய்வதால் கடவுள் அதிமுக பக்கம்தான் இருப்பார்.

வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெல்லும். மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்து, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார்’ என்றார்.

இதையும் படிங்க:50 ஆண்டுகால அரசியல் உறவு... கொள்கை... அன்பின் நீட்சி... லாலு குணமடைய நிதிஷ் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details