தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓஎம்ஜி கண்களோடு பார்க்கிறார் ஸ்டாலின் -ஆர்.பி. உதயகுமார் சாடல் - minister udhayakumar

மதுரை: ஸ்டாலின் எப்போதும் ஓஎம்ஜி கண்களோடு பார்க்கிறார் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

minister udhayakumar

By

Published : Sep 12, 2019, 9:46 AM IST

Updated : Sep 12, 2019, 10:58 AM IST

வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில்செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "முதலமைச்சர் பழனிசாமி சாமான்ய முதலமைச்சராக இருந்து சாதனை படைத்து இருக்கிறார். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும் பாராட்டுகின்ற வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். காலம் தேர்ந்தெடுத்த தலைவராக முதலமைச்சர் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு

இதனிடையே, ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டது குறித்த கேள்விக்கு, "எதிர்க்கட்சித் தலைவர் எல்லாவற்றையும் ஓஎம்ஜி (oh my God - அடக் கடவுளே!) கண்களால் பார்க்கிறார். வெள்ளைப் பார்வையாக பார்ப்பதில்லை, அந்தக் கண்ணோட்டத்தை அவர் விட்டுவிட்டால் நிச்சயமாக முதலமைச்சரை வரவேற்பார்" என பதில் அளித்தார்.

மேலும், டிடிவி தினகரன் கூறியது வஞ்சப் புகழ்ச்சி அணி எனச் சொன்ன ஆர்.பி. உதயகுமார், ஒருவேளை நல்ல எண்ணத்தோடு கூறியிருந்தால் வரலாறு அதனை வரவேற்கும் என்றார்.

Last Updated : Sep 12, 2019, 10:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details