மதுரை: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் செய்திருந்தார். அதில், "தற்போது மாவட்ட நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை பெறப்பட்டு வருகின்றன.
விரைவில் அரசு வழக்கறிஞர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பட்டியலில் தகுதி வாய்ந்த வழக்கறிஞர்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறில்லாமல் தகுதியற்ற நபர்கள் நியமிக்கப்பட்டால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்படும். 2017ஆம் ஆண்டு நியமன விதிகளின் படியும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படியும் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்ட வல்லுநர்கள் குழு அமைத்து அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக 2017ஆம் ஆண்டு அரசு வழக்கறிஞர்கள் நியமன விதிமுறைபடி மாவட்ட நீதிமன்றங்கள் , கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்க வேண்டும்.