சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கோடநாடு கொலை - கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்" என தெரிவித்து இருந்தார்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் என்னை தொடர்புபடுத்தி போசுவதால் என் பெயருக்கு கலங்கம் எற்படுகிறது என கூறி உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு எதிராக ரூ 1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டும், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குளில் என்னை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது,
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக விசாரிக்கப்பட்டு வரும், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஒரு முறை கூட என்னை விசாரணைக்கு அழைக்கவில்லை, விசாரிக்கப்படவில்லை. மேலும், கோடநாடு கொலை வழக்கு குறித்த அரசு விசாரணை நடத்தி வருகின்றனர்.