மதுரை:திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சகுந்தலா (வயது 49). இவர்களுக்கு ஒன்றரை வயது குழந்தை உள்பட 2 மகள்கள் இருந்தனர்.
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சகுந்தலா கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்தது.இதுகுறித்து செல்வராஜ் காவல்துறையில் புகார் அளித்தார்.
ஆயுள் தண்டனை
விசாரணையில், சகுந்தலாதான் குழந்தையை கிணற்றில் வீசியுள்ளார் என கொலை வழக்குபதிவு செய்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை திருச்சி மாவட்ட நீதிமன்றம் விசாரித்து, சகுந்தலா மீதான கொலை வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் அவர் திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் அவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்தார். இதனால் பிணையில், வெளியில் வந்த அவர், வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. கடந்த 2014ம் ஆண்டில் அவரது மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் மீண்டும் சகுந்தலா சிறையில் அடைக்கப்பட்டார்.
வழக்கறிஞரின் முயற்சி
இவரது விவகாரம் குறித்து தகவல் அறிந்த வழக்கறிஞர் தாமஸ் பிராங்க்ளின் சீசர், சகுந்தலாவின் மேல்முறையீட்டு மனு மீதான உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து, அவருக்கு பிணை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சகுந்தலாவுக்கு பிணை அளித்து, அவர் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி சகுந்தலாவுக்கு ஆயுள்தண்டனை விதித்தது தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டது.