ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வெற்றிவேல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வு நடத்தப்படாது என ஆளும் திமுக அரசு கூறியிருந்தது. ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு, செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ’நீட் தேர்வு தடை செய்யப்படும்’ என அளித்த உறுதியே மாணவர்களின் மனக் குழப்பத்திற்கும், சிலர் தற்கொலை செய்து கொண்டதற்கும் காரணம்.
ஆகவே தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொது இடங்களில் வாக்குறுதிகளை வழங்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும், நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரியுள்ளார். மேலும் மன அழுத்தத்துக்கு ஆளான மாணவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட வேண்டும்" எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.