தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சித்திரைத் திருவிழா: மீனாட்சி சொக்கநாதர் வீதி உலா

மதுரை: மீனாட்சி கோயிலில் சித்திரைத் திருவிழா 11ஆம் நாள் ஆடி வீதிகளில் மீனாட்சி சொக்கநாதர் பிரியாவிடை வீதி உலா நிகழ்வு நடைபெற்றது.

Madurai
Madurai

By

Published : Apr 25, 2021, 12:37 PM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா பிரசித்திப் பெற்றது. சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது.

திருக்கல்யாணத்திற்கு மறுநாள் திருத்தேர் வீதி உலா நடைபெறுவது வழக்கம். கரோனா காரணமாக மாசி வீதிகளில் சுவாமி வீதியுலா வருவது தடைசெய்யப்பட்டுள்ளதால், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்த் திருவிழாவை கோயிலுக்குள் நடத்த நிர்வாகம் முடிவுசெய்து சட்டத்தேரில் இன்று காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆடி வீதிகளில் வலம்வந்தனர். இதற்காகப் புதிதாக சட்டத் தேர் செய்யப்பட்டது. தேரில் மீனாட்சி தனித்தேரிலும், சொக்கநாதர் பிரியாவிடை தனித்தேரிலும் ஆடி வீதிகளில் வலம்வந்தனர்.

இதில் கோயில் ஊழியர்கள், சிவாச்சாரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நாளை தீர்த்தவாரியுடன் சித்திரைத் திருவிழா நிறைவுபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details