திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் அவனியாபுரம் அயன்பாப்பாகுடி எண் 149 ல் வாக்குசாவடியில் திமுக சர்பில் முகவர்களாக நியமனம் செய்யப்பட்ட பாலாஜி (23) கார்த்திக் (21) என்ற இருவரின் வாக்குச்சாவடி முகமை அங்கீகார அட்டையில் தேர்தல் அலுவலரின் முத்திரை இல்லாமல் இருந்ததால், போலி எனக் கருதி அவர்களை காவல் துணை ஆணையர் அலெக்ஸாண்டர் விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து வந்துள்ளார். அதற்குள் இது குறித்து, தகவலறிந்து திமுக தொழில் நுட்ப பிரிவு மாநில செயலர் தியாகராஜன், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி உட்பட 70க்கும் மேற்பட்டோர் அவனியாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அவனியாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினர் !
மதுரை : திமுக சர்பில் வாக்குசாவடியில் முகவர்களாக நியமனம் செய்யப்பட்ட இருவர், அங்கீகாரமில்லாத அட்டை வைத்திருந்ததால் காவல்துறை கைது செய்ததை கண்டித்து திமுகவினர் காவல் நிலைத்தை முற்றுகையிட்டனர்.
திமுகவினர்
விசாரணைக்கு பின் அது போலியில்லை என உறுதியானதை அடுத்து பாலாஜி, கார்த்திக் இருவரையும் காவல் துறை விடுவித்தனர். இது குறித்து செய்தியாளார்களிடம் தியாகராஜன் பேசுகையில், இது தேர்தல் அலுவலர்களின் தவறு. இதற்காக இருவரையும் காவல் நிலையால் அழைத்து வந்ததை கடுமையாக கண்டிக்கிறோம். திமுக தரப்பில் தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியர், தேர்தல் பார்வையாளர் ஆகியோரிடம் இது குறித்து புகார் அளிக்கவுள்ளோம், என்றார்.