தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு எதிரொலி: திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் நடந்த திருமணங்கள்! - marriages in front of thiruparankundram temple

மதுரை: ஊரடங்கு காரணமாக மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வாசலில் 10-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் நடந்த திருமணங்கள்!
திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் நடந்த திருமணங்கள்!

By

Published : May 17, 2021, 2:54 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக, கோயில்களில் திருமணங்களை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அறுபடை வீடுகளில் முதல்படைவீடான மதுரை திருப்பரங்குன்றம் முருகனின் கோயிலில், பல மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்டிருந்த திருமணங்கள் இன்று நடைபெற்றன.

இதில், மணமக்கள் மற்றும் 20 பேர் கொண்ட திருமண வீட்டார் குழு கலந்து கொண்டு எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் நடந்த திருமணம்

கரோனா ஊரடங்கு காரணமாக திருமணத்தை விமரிசையாக நடத்த முடியவில்லை என திருமண வீட்டார் தெரிவித்தனர். இதேபோல், மதுரை மீனாட்சி கோயிலின் முன்பும் திருமணங்கள் நடைபெற்றன.

திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் நடந்த திருமணங்கள்!

இதையும் படிங்க: தலைநகரில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருகிறது - மாநகராட்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details