சூலுார், கள்ளக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்சரவணன், வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
திருப்பரங்குன்றத்தில் மேஜிக் ஷோ நடத்தி நூதன முறையில் தேர்தல் பரப்புரை! - By election
மதுரை: திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க நூதன் முறையில் மேஜிக் ஷோ நடத்தப்பட்டது.
அதன் ஒருபகுதியாக நேற்று திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய பகுதி, சின்ன ஆனப்பானடி ராஜமான் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். மேலும், பொது மக்களிடையே தற்போது நடக்கும் ஆட்சியை எடுத்துரைக்கும் வகையில் மேஜிக் நிபுணர் ராஜேஷ் பெர்ணாண்டோ என்பவர் காகிதத்தை கிழித்து அதை ஒன்றாக இணைப்பது, காலி தண்ணீர் பாட்டிலில் நாணயத்தை போடுதல், வண்ண வண்ண ஒரே நீள துணியை திமுக கட்சி கொடியாக மாற்றுதல் உள்ளிட்ட மாயவித்தைகளை நடத்தி காட்டினார். இந்த நிகழ்ச்சி பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் உள்பட அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.