மதுரை வளையங்குளத்தைச் சேர்ந்தவர் வீர ராமர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரக்கூடிய இவர், வீர விளையாட்டுகள் மீது கொண்ட ஆர்வத்தினால் தனது வீட்டில் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இந்தக் காளைகள் வருடந்தோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியிலும் பங்கெடுத்து வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் கைலாசா என்கிற நாட்டை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ள நித்தியானந்தா, தனது கைலாச நாட்டில் குடியேற விரும்புவோர்கள் இ-பாஸ்போர்ட் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
சில நாட்களுக்கு முன்னதாக, பல்வேறு கிளைகள் கொண்ட மதுரை டெம்பிள் சிட்டி உணவகத்தின் கிளையை கைலாசாவில் தொடங்குவதற்கு அனுமதி வேண்டி அதன் உரிமையாளர் குமார் நித்தியனந்தாவிற்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி இருந்தார். அதனைத் தொடர்ந்து கைலாச நாட்டில் விவசாயம் செய்ய அனுமதி கேட்டு விவசாயி பாண்டித்துரை என்பவரும் கடிதம் எழுதியிருந்தார்.