தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிக்-டாக் செயலி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மதுரை இளைஞர்! - Madurai Youngster Helping Disabled People

மதுரை: டிக்-டாக் செயலில் பதிவு செய்து, அதன் மூலம் கிடைத்த உதவியால் 20 மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்து இளைஞர் ஒருவர் அசத்தியுள்ளார்.

டிக்-டாக் செயலி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மதுரை இளைஞர்!
டிக்-டாக் செயலி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மதுரை இளைஞர்!

By

Published : May 5, 2020, 10:31 AM IST

Updated : May 6, 2020, 10:51 AM IST

காதல் மோசடி, பண மோசடி, சாதியப் பிரச்னைகள் என பல்வேறு சர்ச்சைகளை கிளம்பும் படியாக பதிவிட்டு வரும் டிக்-டாக் பயனாளர்கள் மத்தியில், டிக்-டாக்கை இப்படியும் செய்தும் பலரின் அன்றாட தேவைகள் பூர்த்தி செய்யலாம் என்பதை சாதித்து காட்டியிருக்கிறார் மதுரை இளைஞர்.

மதுரை அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார், டிக்-டாக் செயலியில் பல்வேறு சினிமா பாடல்களை செய்து, ஃபேன் பேஜை உருவாக்கியுள்ளார். அந்தப் புகழை வைத்து ஊரடங்கினால் அத்தியாவசியப் பொருள்கள் கூட இல்லாமல் தவித்துவரும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும்மாறு வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலம், சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து மனோஜ்குமார் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி உதவியுள்ளனர்.

டிக்-டாக் செயலி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மதுரை இளைஞர்!

இந்த உதவியை ஊரடங்கினால் தவித்துவந்த சுமார் 20 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்குப் பணம், அத்தியாவசியப் பொருள்கள் கொடுத்து உதவியுள்ளார். வெறும் பிரபலம் ஆவதற்கு மட்டுமின்றி டிக்-டாக் செயலியை இப்படியும் பயன்படுத்தி, மக்களுக்கு உதவலாம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் மனோஜ்குமார்.

இதையும் படிங்க...பெண்களை ஏமாற்றிய காசியை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!

Last Updated : May 6, 2020, 10:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details