தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் மோசடி - பெண் பரபரப்பு குற்றச்சாட்டு

பிரதமர் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தனது வீட்டிற்கு முறையான நிதி ஒதுக்காததுடன், லஞ்சம் பெற்று மோசடி செய்ததாக ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் மீது பயனாளி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் மோசடி - பெண் பரபரப்பு புகார்!
பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் மோசடி - பெண் பரபரப்பு புகார்!

By

Published : Jan 10, 2023, 9:37 AM IST

மதுரை: சோழவந்தான் அருகே உள்ள மண்ணாடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணன். இவர் பாரத பிரதமர் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக, வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி அன்னலட்சுமி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றினை அளித்தார்.

பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் மோசடி செய்ததாக மதுரை மண்ணாடிமங்கலத்தை சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் புகார்

இதுகுறித்து அன்னலட்சுமி கூறுகையில், “கட்டுமானப் பணி தொடங்கும் முன்பே எனது கணவர் இறந்து விட்டார். அவர் உயிரோடு இருக்கும்போது, இதற்காக மண்ணாமடிமங்கலம் ஊராட்சி செயலாளர் செந்தில் என்பவரிடம் 30,000 ரூபாய் லஞ்சமாக வழங்கியிருப்பதாக என்னிடம் கூறியிருந்தார்.

இதனிடையே வீடு கட்டுவதற்காக ஊராட்சி செயலரை அணுகியபோது, என்னுடைய கணவர் பணம் எதுவும் தரவில்லை எனக்கூறி, எனது வீட்டிற்கே வந்து மேலும் 20,000 பணத்தையும் பெற்று சென்றார். இதனையடுத்து கடந்த 2022, செப்.21ஆம் தேதி 30 மூட்டை சிமெண்ட்டும், பிறகு டிச.20ஆம் தேதி 40 மூட்டை சிமெண்ட்டும் வழங்கப்பட்டது.

ஆனால், அதற்கு பிறகு எந்த உதவியும் எனக்கு கிடைக்கவில்லை. தற்போது உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டு, வீட்டின் முடிவடைந்த கட்டுமானப் பணிகளுக்கு இதுவரை பணம் மற்றும் கட்டுமானப் பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை. விதவைப்பெண் என்றும் பாராமல், லஞ்சம் பெற்று மத்திய அரசின் திட்டத்தில் மோசடி செய்த மண்ணாடிமங்கலம் ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லஞ்சமாக பெற்ற பணத்தையும் பெற்றுத் தருவதுடன், முழு கட்டுமானப் பணிகள் நிறைவடைதற்கு தேவையான பணம் மற்றும் பொருட்களை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details