மதுரை மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள ஊமச்சிகுளத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவர் கட்டடத்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊமச்சிக்குளம் பகுதியில் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது.
குடிப்போதையில் கட்டட தொழிலாளி வெட்டிப் படுகொலை - போலீசார் விசாரணை - ஊமச்சிகுளம்
மதுரை: வீரபாண்டி அருகே ஊமச்சிக்குளத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கட்டட தொழிலாளி வெட்டிப் படுகொலை
தகராறு முற்றிய நிலையில், ராஜரத்தினத்தின் நண்பர்கள் அவரை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தலை, இடுப்பு பகுதிகளில் சராமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பி ஒடியுள்ளனர். சம்பவ இடத்திற்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊமச்சிகுளம் காவல்துறையினர் ராஜரத்தினத்தின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.