தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளைஞர் படுகொலை: 4 பேர் கைது

மதுரை: விரகனூரில் திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் நான்கு பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

கொலை
கொலை

By

Published : Jun 4, 2020, 6:33 PM IST

மதுரை விரகனூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மதன்ராஜ் (27). இவர் அலுமினிய கதவுகளுக்கு கண்ணாடி பதிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்று (ஜூன் 3) பிற்பகல் 3.30 மணி அளவில் விரகனூர் அடுத்த ஐராவதநல்லூர் அருகே சாலையோரத்தில் உள்ள தடுப்புச்சுவரின் மீது அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், பயங்கர ஆயுதங்களைக் கொண்டு மதன்ராஜை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளனர்.

இதனை அடுத்து ஆறு பேரும், அங்கிருந்து தப்பியுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர், சிலைமான் காவல் நிலையத்திற்கு அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மதன்ராஜ் உடலைக் கைப்பற்றி மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலையுடன் சம்பந்தப்பட்ட தவராஜ் கண்ணன், சதீஷ் கண்ணன், ராம், பிரகாஷ் உள்ளிட்டோர் இன்று (ஜூன் 4) காலை சிலைமான் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம், காவல் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட மதன்ராஜும், கொலை செய்த தவராஜும் விரகனூர் காளியம்மன் கோயில் அருகே வசித்து வந்துள்ளனர். அப்போது தவராஜ் மனைவிக்கும் மதன்ராஜுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் தவராஜ் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தவராஜ், தனது உறவினர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து மதன்ராஜை கொலை செய்ததாகக் கூறியுள்ளனர். மேலும், இக்கொலையுடன் தொடர்புடைய மேலும் இருவரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details