மதுரை சுண்ணாம்பு காளவாசல் செல்வ விநாயகர் கோயிலைச் சேர்ந்தவர் பஷீர். ஏற்கனவே திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஏழு வருடத்திற்கு முன்பு இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், மதுரை செல்லூர் அகிம்சாபுரத்தைச் சேர்ந்த திருநங்கை கல்கியை நேற்று திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சுறுத்தல் கொடுக்கும் தங்களது குடும்பத்தினரிடமிருந்து பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவரும் தஞ்சமடைந்தனர்.