மதுரையில் நேற்று நடந்து முடிந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேர்தல் அலுவலர் பஞ்சவர்ணம், "மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு அமைதியாக நடைபெற்றது. 297 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆவணங்கள், உபகரணங்கள் பாதுகாப்பு அறையில் சீலிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை - பஞ்சவர்ணம் - thirupparangundram
மதுரை: திருப்பரங்குன்றத்தில் 14 இருக்கைகள் அமைத்து, 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் அலுவலர் பஞ்சவர்ணம் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம்
சில இடங்களில் விவிபேட் இயந்திரங்களில் பிரச்னை ஏற்பட்டதால் மாற்று இயந்திரம் வைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதிக்கான வாக்குப்பதிவு மையத்தை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கையானது 22 சுற்றுகளாக நடைபெறவுள்ளது", என்று அவர் தெரிவித்தார்.