தமிழ்நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகின்ற கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், கண்காணிப்பதற்கும் மதுரை ராசாசி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, மதுரை தோப்பூரில் அமைந்துள்ள அரசு நுரையீரல் மருத்துவமனை வளாகத்தில் 95 படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக கரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.
அதிநவீன சிகிச்சை அளிப்பதற்கென அனைத்து வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், ஒவ்வொரு படுக்கைகளுக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி விட்டும், அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.