மதுரை மாவட்ட தெற்கு சட்டப்பேரவை தொகுதி அதிமுக உறுப்பினரான எஸ்.எஸ் சரவணனுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று முன்தினம் (ஆக. 09) சோழவந்தான் தொகுதியின் சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர் மாணிக்கத்துக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், தற்போது மீண்டும் ஒரு எம்எல்ஏவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.