மதுரை தெற்கு வாசல் பச்சரிசிக்கார தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேவரின் சிலை இருந்துள்ளது. அந்த சிலை சேதமடைந்த காரணத்தினால் அது அங்கிருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில், சிலை இருந்த இடத்தில் புதிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலையை வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து நேற்று நள்ளிரவு சம்பவ இடம் சென்ற காவல் துறையினர், அவ்விடத்திலிருந்து அச்சிலையை அப்புறப்படுத்த முயன்றனர்.
அப்போது, திடீரென அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் காவல் துறையினரை சூழ்ந்துகொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
அனுமதி பெறாமல் தேவர் சிலை வைத்த இடம் தொடர்ந்து, பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் நடந்த நீண்ட வாக்குவாதத்தில், காவல்துறையினர் அனுமதி பெற்ற பிறகே சிலையை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனர். எனினும், சிலை வைத்த இடத்தில் சில காவலர்கள் பாதுகாப்புக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.