தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அஞ்சு பைசாவுக்கு பிரியாணி: கரோனாவாவது கிரோனாவாவது... அலைமோதிய கூட்டம்! - அஞ்சு பைசாவுக்கு பிரியாணி

மதுரை: செல்லூரில் உணவகம் ஒன்றில் அஞ்சு பைசாவுக்கு பிரியாணி என்ற அறிவிப்பால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மறந்து மக்கள் கூட்டம் அலைமோதியது.

biriyani
biriyani

By

Published : Jul 21, 2021, 4:29 PM IST

மதுரை செல்லூர் பகுதியில் இன்று (ஜூலை 21) புதிதாகப் பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டது. அறிமுகச் சலுகையாக செல்லாத ஐந்து பைசாவைக் கொண்டுவருபவர்களுக்கு பிரியாணி பொட்டலம் இலவசம் என்று பிரியாணி கடை நிர்வாகம் அறிவிப்புசெய்தது.

இந்த அறிவிப்பையடுத்து இன்று (ஜூலை 21) பிற்பகலில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செல்லாத ஐந்து பைசா நாணயத்தை கொடுத்து பிரியாணி பொட்டலம் வாங்க முண்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அஞ்சு பைசா பிரியாணி

கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் ஒருகட்டத்தில் கடைக்காரர்கள் கடையின் ஷட்டரை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல் துறையினர் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மறந்து பெரும் கூட்டம் அப்பகுதியில் கூடியதால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

இதையும் படிங்க: கரோனா ஊரடங்கில் லட்ச கணக்கில் பிரியாணிகளை தின்று முழுங்கிய இந்தியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details