மதுரை: தமிழ்த் திரைப்பட இயக்குநர் நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது திரைப்படமான ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையில் வெளியாக உள்ளது. ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் 'ஜெயிலர்' திரைப்படம் சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் வகையிலான கதை அம்சம் என்பதால் ரசிகர்கள் அதனை வலியுறுத்தும் வகையில் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில், மதுரை மத்திய சிறையில் உள்ள நூலகத்திற்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 247 புத்தகங்கள் மற்றும் பியானோ இசைக்கருவி மற்றும் ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றை சிறைத்துறை அதிகாரி டிஐஜி பழனியிடம் இன்று (ஜூலை 31) வழங்கினர்.
அரசியல், இலக்கியம், ஆன்மிகம், திருக்குறள், சட்டம், வரலாற்றுப் புத்தகங்கள், நாவல்கள், வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள், பகவத் கீதை, குர்ஆன், பைபிள் உள்ளிட்ட மும்மத நூல்கள் ஆகியவற்றை வழங்கினர். புத்தகங்களை வழங்கியதைத் தொடர்ந்து ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் போது நடிகர் ரஜினி மது அருந்தக்கூடாது என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததை நிறைவேற்றும் வகையில், 'இனி ரசிகர்கள் யாரும் மது அருந்தமாட்டோம்' என டிஐஜி பழனி முன்பாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க:தமிழகத்தின் செடி புட்டா சேலை, நாமக்கட்டி, மட்டி வாழைப்பழத்துக்கு புவிசார் அங்கீகாரம்!