தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலச்சரிவு ரயில் பாதை சீரமைப்பு: மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு - தென்னக ரயில்வே

நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதைப் பிரிவில் ஏற்பட்ட நிலச்சரிவு சரிசெய்யப்பட்டு சீரமைக்கப்பட்டு நேற்றுமுதல் ரயில் போக்குவரத்திற்குத் தயாராகிவிட்டது எனத் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

நிலச்சரிவு ரயில் பாதை சீரமைப்பு - மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு!
நிலச்சரிவு ரயில் பாதை சீரமைப்பு - மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு!

By

Published : Nov 24, 2021, 6:34 AM IST

மதுரை: ரயில்கள் இயக்கம் தொடர்பாக தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதை பிரிவில் ஏற்பட்ட நிலச்சரிவு சரிசெய்து சீரமைக்கப்பட்டு நேற்றுமுதல் (நவம்பர் 23) ரயில் போக்குவரத்திற்குத் தயாராகிவிட்டது.

நவம்பர் 23ஆம் தேதி காலை சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்ட சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) ரயில் நாகர்கோவில் வழியாக குருவாயூர் வரை இயக்கப்பட்டது. பல்வேறு ரயில் நிலையங்களில் காலிப் பெட்டித் தொடர் இருப்பதால், ஒரு நாள் மட்டும் ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் தொடர்கின்றன.

நவம்பர் 23ஆம் தேதி இரவு குருவாயூரிலிருந்து புறப்பட்ட குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸானது (16128) எர்ணாகுளத்திலிருந்து இயக்கப்பட்டது. இதேபோன்று அதே தேதியில் இரவு மதுரையிலிருந்து புறப்பட்ட மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் (16729) ரயிலானது திருநெல்வேலிவரை மட்டும் இயக்கப்படுகின்றது.

அதேபோல நவம்பர் 24ஆம் தேதி மாலை புனலூரிலிருந்து புறப்பட வேண்டிய புனலூர் - மதுரை எக்ஸ்பிரஸானது (16730), புனலூர் - திருவனந்தபுரம் இடையே ரத்துசெய்யப்படுகிறது. அதற்கு மாற்றாக புனலூர் - மதுரை எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையில் தொல்லியல்துறை சார்பில் உலக மரபு வார விழா!

ABOUT THE AUTHOR

...view details