மதுரை மாவட்டம்முனிச்சாலை இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த கார்த்தி (எ) காட்டு ராஜா என்பவர் மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில் தன்னை சந்திக்க யாரும் வராத காரணத்தால் கழிவறைக்கு அருகில் கிடந்த கண்ணாடித் துண்டுகளை விழுங்கியதாக சிறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கண்ணாடி துண்டுகளை விழுங்கி கைதி தற்கொலை முயற்சி - Prisoner attempts suicide in Madurai
உறவினர்கள் யாரும் பார்க்க வரவில்லை என்ற மன உளைச்சலில் விசாரணைக் கைதி கண்ணாடி துண்டுகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணாடித் துண்டுகளை விழுங்கி தற்கொலை முயற்சி - மதுரை மத்திய சிறை விசாரணை கைதிக்கு சிகிச்சை
இதையடுத்து அவருக்கு சிறையில் உள்ள உள் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:தமிழகத்தின் முதல் வணிக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை திறந்து வைக்கிறார் ஸ்டாலின்