மதுரை மாநகரில் அவ்வப்போது செயின் பறிப்பு, வழிப்பறி செய்தல் போன்ற குற்றச்செயல்கள் நடைபெற்று வருகிறது. இத்தகைய குற்றங்களை கட்டுப்படுத்தவும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டும் காவல் துறையினர் மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் தினசரி வாகன தணிக்கையும், குற்றம் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளில் ரோந்தும் செய்து வருகின்றனர்.
குற்றவாளிகளை கண்டறிய புதிய செயலி - மதுரை மாநகர போலீஸ் அசத்தல்! - மதுரை மாநகர போலீஸ்
மதுரை: குற்றவாளிகளின் புகைப்படங்களை சந்தேகிக்கும் நபர்களோடு ஒப்பிட்டு கண்டுபிடிக்கும் நவீன செயலி ஒன்றை மதுரை மாநகர காவல் துறையினர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.

police
அந்த சமயங்களில் தென்படும் சந்தேக நபர்களை குற்ற நடத்தையாளர்களா, ஏற்கனவே குற்ற வழக்குளில் ஈடுபட்டவர்களா எனக் கண்டறிவதற்காக காவல் நியைத்திற்கு அழைத்து செல்வதும் சிசிடிஎன்எஸ் தரவு தளத்தில் ஆய்வு செய்து குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்களா இல்லையா என அறியப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் சென்னை பெருநகர காவலில் ஏற்கனவே சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மதுரை மாநகரிலும் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிப்பதற்கு பெருமளவில் இந்த சிறப்பு செயலி பயன்படும். மேலும் அதிவேக இணையதள வசதி இல்லாத பகுதிகளிலும்கூட இத்தொழில்நுட்பத்தை எளிதில் பயன்படுத்தலாம். 50 கேபி (kb) அளவில்கூட ஒரு வினாடி நேரத்திற்குள்ளாகவே இந்த செயலி மூலம் சந்தேக நபர்களின் குற்ற தொடர்பு பற்றிய விபரங்களை அறிய முடியும்.
இந்த சிறப்பு செயலியானது காவல் துறை பயன்பாட்டிற்கு மட்டுமே உரியது. 2016ஆம் ஆண்டிலிருந்து குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் சுமார் 3 ஆயிரம் பேரின் புகைப்படங்கள் இத்தரவு தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வபோது குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் புதிய குற்றவாளிகளின் புகைப்படங்களும் தொடர் நடவடிக்கையாக பதிவேற்றம் செய்யப்பட இருக்கிறது. மேலும் அண்டை மாவட்ட காவல்துறையினருடன் இதுகுறித்து கலந்தாய்வு செய்தும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தியும் அந்த மாவட்டங்களின் குற்றவாளிகள் பட்டியல் சேகரிக்கப்பட்டு இத்தரவு தளத்தின் பயன்பாடு விரிவாக்கம் செய்யப்படவும் உள்ளது.
இதையும் படிங்க:ஊரடங்கில் பள்ளி மாணவர் உருவாக்கிய அட்டகாசமான செயலி!