மதுரை:கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு மதுரை மாவட்ட காவல் துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், கைது செய்தும், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பறிமுதல் செய்தும், சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் மிக முக்கியமானதாக கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக அக்குற்றவாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டும், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை மானூத்து முனியாண்டி கோவில் மொட்டைபாறை பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் எழுமலை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்களுடன் சோதனை மேற்கொண்டனர்.