மதுரை: தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டின் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெறும். குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது. அங்கு ஜல்லிக்கட்டு போட்டி திருவிழா போல் கொண்டாடப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டும் பொங்கலை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற்று வருகின்றது. அதில் உலகப் புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் வகையில், போட்டியில் முதல் பரிசை வெல்லக்கூடிய மாட்டு உரிமையாளருக்கும், மாடுபிடி வீரருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் (Nissan Car) மற்றும் 2வது பரிசாக இருசக்கர வாகனம் (Apache) வழங்கப்படுகிறது.
முதல் பரிசு நிஸான் கார்: இந்த கார் நிஸான் மேக்னைட் 2020-2023 இடைப்பட்ட ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட காரை போல் தெரிகிறது. ஏனென்றால் காரில் உள்ள நிஸான் நிறுவனத்தின் லோகோ, புதிய நிஸான் நிறுவனத்தின் தற்போதைய லோகோ. இந்த லோகோ 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு மாற்றப்பட்டது ஆகும்.
இந்தியாவில் தற்போது எக்ஸ் இ, எக்ஸ் வி, எக்ஸ் வி எக்ஸிகியூட்டிவ், எக்ஸ் வி ப்ரிமியம், குரோ எடிசன் உள்ளிட்ட வேரியண்ட்களில் நிஸான் மேக்னைட் விற்பனை செய்யப்படுகிறது. நிஸான் மேக்னைட் எக்ஸ் ஷோரும், தற்போது 6 லட்சம் முதல் 11 லட்சம் வரை விற்பனை செய்கிறது. இதில் எந்த நிஸான் மேக்னைட் வேரியண்ட் கார் வழங்கப்படுகிறது என்பது தெரியவில்லை.
சிறப்பு அம்சங்கள்: பெட்ரோல் இன்ஜின் உடன் மட்டுமே மேக்னைட் கார் கிடைக்கிறது. டிசல் இன்ஜின் கார் கிடைப்பதில்லை. 1.0 லிட்டர் இன்ஜின் உள்ளது. பெட்ரோல் இன்ஜின் 999 சிசி ஆகும். இது ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. மேலும், 5 இருக்கைகள் கொண்ட 3 சிலிண்டர் கார் ஆகும். அதேபோல், நிஸான் மேக்னைட் டாப் வேரியண்ட் கார் 0-100 கி.மீ வேகத்தை, 11.14 நெடிகளில் அடையும். அதேபோல், இந்த காருக்கு என்கேப் (NCAP) என சொல்லப்படும் நிறுவனம், இந்த காரின் பாதுகாப்புக்கு 4 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
2வது பரிசு இருசக்கர வாகனம் (Apache): மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் 2வது இடத்தை பிடிப்பவர்களுக்கு இருசக்கர வாகனம் (TVS Apache RTR 160) வழங்கப்படுகிறது. இந்த இரு சக்கர வாகனத்தில் (Apache RTR 160) மொத்தமாக 3 வேரியண்ட் உள்ளது.
அப்பாச்சி ஆர்டிஆர் 160 டிரம், அப்பாச்சி ஆர்டிஆர் 160 டிஸ்க் மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 160 டிஸ்க் மற்றும் ப்ளுடூத் என்ற 3 வேரியண்ட் ஆகும். தற்போது 1 லட்சத்து 20 ஆயிரம் முதல் 1 லட்சத்து 27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த வேரியண்ட் பரிசாக கொடுக்கப்படுகிறது என்பது தெரியவில்லை.
TVS Apache RTR 160 ஆனது 159.7 சிசி பிஎஸ்6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 15.82 bhp மற்றம் 13.85 Nm டார்க் திறனைக் கொண்டது. 138 கிலோ எடை கொண்ட இந்த பைக், 12 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவை கொண்டது ஆகும்.
இதையும் படிங்க:உங்களுக்கு நீரிழிவு நோய் வரக்கூடாதா?... அப்போ இதை மட்டும் கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!