தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சற்று கண்ணயர்ந்தாலும் சந்துல இந்தியை நுழைத்து விடுவாங்க' - சு.வெங்கடேசன் எம்பி - சு வெங்கடேசன் எம்பி மத்திய அரசுக்கு கேள்வி

சென்னை அலுவலகப் பணிக்கு எதற்கு இந்தி மொழி அறிவு? சட்ட மீறலை கைவிட்டு புதிய அறிவிப்பை வெளியிட வேண்டுமென எனக் கூறி ஒன்றிய அமைச்சர் வீரேந்திரகுமாருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.

சு.வெங்கடேசன் எம்பி
சு.வெங்கடேசன் எம்பி

By

Published : Apr 18, 2022, 8:33 PM IST

மதுரை: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று (ஏப்ரல் 18) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர். விரேந்திர குமாருக்கு இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளேன். மாற்றுத் திறனாளி அதிகாரமளித்தல் தேசிய மையம், முட்டுக்காடு, சென்னை 13.04. 2022 அன்று பணி நியமன அறிவிக்கை ஒன்றைவிடுத்துள்ளது. ஒரே ஒரு "உதவி தேர்வு கட்டுப்பாட்டாளர்" பதவிக்கான "வாக் இன்" நேர்காணல்/ தேர்வுக்கான அறிவிப்பு அது. எதிர்வரும் 22.04.2022 அன்று அந்த தேர்வு நடைபெறவுள்ளது.

அந்த அறிவிக்கையில் தேர்வுக்கான தகுதிகளில் ஒன்றாக "புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு இந்தி அறிவு" வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இது அலுவல் மொழிச் சட்ட விதிகள் 1976 ஐ மீறுவது ஆகும். மண்டலம் 3இல் இடம் பெற்றுள்ள மாநிலங்களில் அலுவல் தொடர்பு மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்று அவ்விதிகள் தெளிவாக கூறுகிறது. ஒன்றிய அரசிடமிருந்து வரும் தகவல்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டுமென்றும், மண்டலம் 3இல் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் இருந்து செல்லும் கடிதங்களும் ஆங்கிலம் அல்லது இந்தியில் (இந்தி மட்டுமல்ல) இருக்கலாமென்றும் தெளிவாக உள்ளது.

11 மாத பணிக்கு இந்தி தகுதியா?: எனவே இந்தி மொழி அறிவை தேர்வுக்கான தகுதியாக இந்தியா முழுவதும் எந்திரகதியாக விரிவுபடுத்த, வலியுறுத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இரண்டாவதாக, இந்த நிபந்தனை தமிழ்நாட்டில் இருந்து வரும் தேர்வர்களுக்கு பாதிப்பை உருவாக்குவது ஆகும். இது அப்பட்டமான இந்தி திணிப்பே ஆகும்.

எனவே தாங்கள் மாற்றுத் திறனாளி அதிகாரமளித்தல் தேசிய மையம், முட்டுக்காடு, சென்னைக்கு இந்தி மொழி அறிவை மேற்கண்ட தேர்வுக்கான தகுதியாக வலியுறுத்த கூடாது என்றும், இந்த நிபந்தனையை அகற்றி புதிய அறிவிக்கை வெளியிட அறிவுறுத்துமாறும் அமைச்சரை வலியுறுத்தி உள்ளேன்.

சற்று கண்ணயர்ந்தாலும் இடுக்குகள் வழியாக இந்தியை நுழைத்து விடுவார்கள். ஒரு காலியிடம், அதுவும் 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான பணி, இருந்தாலும் இந்தியைத் திணிக்கிறார்கள் எனில் அலுவல் அல்ல, அவர்களின் மொழி அரசியலே காரணம்" என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்படும்' - அமைச்சர் துரைமுருகன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details