தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சந்திர கிரகணம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மூடல்! - madurai news in tamil

சந்திர கிரகணத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயில் நடை காலை 9:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை மூடப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சந்திர கிரகணம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மூடல்!
சந்திர கிரகணம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மூடல்!

By

Published : Nov 8, 2022, 1:41 PM IST

மதுரை: இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சந்திர கிரகணம் இன்று பகல் 2.39 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடிவடைய உள்ள நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் அதன் 22 உபகோயில்களில் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மீனாட்சி அம்மன் கோவிலில் காலசந்தி, சாயரட்சை ஆகிய பூஜைகள் நடைபெற்று கோயில் நடை காலை 09.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அம்மன்-சுவாமி மூலஸ்தானத்தில் பலகணி கதவுகள் அடைக்கப்பட்டு நடை அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ, அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மூடல்!

இதைத் தொடர்ந்து மாலை 04.30 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்படும். அதன் பின் சந்திரசேகரர் புறப்பாடு நடைபெறும். இரவு 07.00 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறும். அதன் பின் இரவு 07.30 மணிக்கு இரவு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:Lunar eclipse: உள்ளங்கையில் சந்திர கிரகணத்தை பார்க்கலாம்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details