தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் திறப்பு!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் உண்டியல்கள் அனைத்து அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

மீனாட்சி கோயில் உண்டியல் திறப்பு
மீனாட்சி கோயில் உண்டியல் திறப்பு

By

Published : Jun 18, 2020, 8:37 AM IST

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை முன்னிலையில் ஜூன் 16, 17-ஆம் தேதிகளில், மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் உபகோயில்களின் உண்டியல் திறக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, கூடலழகர் திருக்கோயில் உதவி ஆணையர் மு.ராமசாமி, உதவி ஆணையர் ஜெ.முல்லை, அறங்காவலர் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள், மதுரை இந்து சமய அறநிலையத்துறை தெற்கு, வடக்கு சரக ஆய்வர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக 54 லட்சத்து 40 ஆயிரத்து 710 ரூபாய், 279 கிராம் தங்கம், 720 கிராம் வெள்ளி, வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 195 இருந்தன.

இதையும் படிங்க:21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் பழனி உடல் நல்லடக்கம்

ABOUT THE AUTHOR

...view details