தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நவராத்திரி 2020: சிவ பூஜை அலங்காரத்தில் அருள்பாலித்த மீனாட்சி அம்மன்! - சிவ பூஜை அலங்காரம்

மதுரை : நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளான இன்று, (அக்.25) சிவபூஜை அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்கதர்களுக்கு காட்சி அளித்தார்.

By

Published : Oct 25, 2020, 8:44 PM IST

உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாக்களில், நவராத்திரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் நவராத்திரி விழா அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி இன்றுடன் (அக்.25) நிறைவடைகிறது.

நவராத்திரி நாள்களில் தினமும் மாலை நான்கு மணி முதல் 5.30 மணி வரை, மாலை 6.45 மணி முதல் இரவு எட்டு மணி வரை பக்தர்கள் மூலஸ்தான அம்மனை தரிசனம் செய்யலாம். மாலை 5.30 மணி முதல் 6.45 மணி வரை மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அச்சமயம் பக்தர்கள் கொலு மண்டபத்தில் உற்சவர் அம்மனை தரிசிக்கலாம். அம்மன் மூலவர் அலங்காரத்தை முதல் நாளில் தரிசிக்காதவர்கள், மறுநாள் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை தரிசிக்கலாம்.

சிவ பூஜை அலங்காரத்தில் அருள்பாலித்த மீனாட்சி அம்மன்

அந்த வகையில் அக்டோபர் 17ஆம் தேதி நவராத்திரி முதல் நாள் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், அக்டோபர் 18ஆம் தேதி வாதவூர் அடிகளுக்கு உபதேசம் செய்யும் அலங்காரத்திலும், அக்டோபர் 19ஆம் தேதி சுவாமி தன்னைத்தானே பூஜித்தல் அலங்காரத்திலும், அக்டோபர் 20ஆம் தேதி விறகு விற்றல் அலங்காரத்திலும், அக்டோபர் 21ஆம் தேதி கடம்பவன வாசினி அலங்காரத்திலும், அக்டோபர் 22ஆம் தேதி வேல்வளை செண்டு கொடுத்தல் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிவ பூஜை அலங்காரத்தில் அருள்பாலித்த மீனாட்சி அம்மன்!

நேற்று முன்தினம் (அக்.23) பட்டாபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அம்மன், நவராத்திரி விழாவின் எட்டாம் நாளான நேற்று (அக்.24) மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரி விழாவின் கடைசி நாளான இன்று (அக்.25) சிவபூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

இதையும் படிங்க:வெள்ளையர்கள் உறங்கும் கல்லறை தோட்டம் மதுரையில்...

ABOUT THE AUTHOR

...view details