மதுரை: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. உலகப் புகழ் வாய்ந்த மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.
ஆண்டுதோறும் சராசரியாக 4 முறை கிரகணங்கள் நிகழும். அதன்படி, சந்திர கிரகணம் அக்டோபர் 28ஆம் தேதி நடக்க உள்ளது. சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழும். அப்போது நிலவின் நிழலை சூரியன் மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழலை சந்திரன் மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க:4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி... சென்னை விமான நிலையத்தில் சிக்கியது எப்படி?