மதுரை : அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " தென் மாவட்டங்களில் இருந்து கரோனா, கரும்பூஞ்சை நோய் பாதிப்புடன அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது".
கரும்பூஞ்சையால் உயிரிழப்பு ஏற்படவில்லை - மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் தகவல் - கண்ணில் பாதிப்பு
கரும்பூஞ்சையால் உயிரிழப்பு ஏற்படவில்லை என மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.
கரும்பூஞ்சை
"கடந்த ஜூலை மாத நிலவரப்படி மதுரை அரசு மருத்துவமனையில் 365 பேர் கரும்பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில், 331 பேர் குணமடைந்தனர். இதில் 112 நோயாளிகளுக்கு கண் மூலம் ஆம்போடெரிசின் மருந்து செலுத்தப்பட்டு குணமடைந்தனர். சர்க்கரை நோய் உள்ளவர்களே கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டனர்".
"365 பேரில் 36 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்ற நோயாளிகளுக்கு கரோனா அறிகுறி மட்டுமே கண்டறியப்பட்டது. 365 பேரில் கரும்பூஞ்சை போன்ற வெள்ளை மஞ்சள் நிற பூஞ்சை போன்ற பல்வேறு பூஞ்சை பாதிப்புகளும் பரிசோதனையில் கண்டறியப்பட்டது".
ஆம்போடெரிசின் மருந்துகள்
"மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போதுமான ஆம்போடெரிசின் மருந்துகள் இருப்பு உள்ளன. கரோனா இரண்டாம் அலையின் போது கரும்பூஞ்சை நோய் சிகிச்சை அளிப்பது என்பது சவாலாக இருந்தது".
"கரும்பூஞ்சை நோயாளிக்கு ஒரு கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு குணமடைந்தாலும், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தாமல் விட்டால் மறு கண்ணில் கரும்பூஞ்சை பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : சென்னை வந்த 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்