மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியத்தில் கேதுவார்பட்டியில் இரண்டாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட முருகேசன் ,டெபாசிட்டை இழந்து படுதோல்வி அடைந்தார். இதனால் விரக்தியடைந்த முருகேசன், நீங்க இப்படி செய்வீங்கன்னு கனவில்கூட எதிர்பார்க்கவில்லை என்றும், தோற்கடித்த மக்களுக்கு நன்றி எனவும் கூறி சுவரொட்டி ரெடி செய்து அப்பகுதியில் ஒட்டியுள்ளார். மேலும், சுவரொட்டியை டிஜிட்டல் வடிவிலும் தயாரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
உள்ளாட்சித் தேர்தலில் தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர்!
மதுரை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்த வேட்பாளரின் சுவரொட்டி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பொதுமக்களுக்கு நன்றி
மதுரைக்கும் போஸ்டருக்கும் அப்படி என்னதான் நெருக்கமோ தெரியவில்லை, எப்போதும் மதுரை மாவட்ட அரசியல் பிரமுகர்கள் அடிக்கும் போஸ்டர்களும், பேனர்களும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிடும். தோற்கடிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட முதல் போஸ்டர் இதுதான் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டை காண சிறப்பு சுற்றுலா!