தமிழ்நாடு

tamil nadu

மதுரையில் மேலும் 86 பேருக்கு கரோனா உறுதி

By

Published : Sep 28, 2020, 8:28 PM IST

மதுரை: இன்று (செப்.28) 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 442ஆக அதிகரித்துள்ளது.

madurai latest corona update
madurai latest corona update

மதுரையில் கரோனா வைரஸ் தொற்றைப் பொறுத்தவரை தற்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று(செப்.28) மட்டும் 86 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 124 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி இன்று (செப்.28) ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 16 ஆயிரத்து 442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15 ஆயிரத்து 359 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 387 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 696 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details