தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு கிலோ மதுரை மல்லி விலை ரூ.3500 - மல்லிகை விலை

கார்த்திகை மாதம், முகூர்த்தம் காரணமாக மதுரை மல்லி விலை கிலோ ரூ.3500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மல்லி கிலோ ரூ.3500; கார்த்திகையால் விலை உயர்வு..
மதுரை மல்லி கிலோ ரூ.3500; கார்த்திகையால் விலை உயர்வு..

By

Published : Dec 3, 2022, 12:19 PM IST

மதுரை: மாட்டுத்தாவணி, எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகேயுள்ள மலர் வணிக வளாகத்தில் மதுரை மாவட்டம் மட்டுமன்றி, அண்டை மாவட்டங்களான விருதுநகர், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் பகுதிகளிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இங்கு நாள்தோறும் சராசரியாக 50 டன்னுக்கும் மேல் பூக்கள் விற்பனையாகின்றன. குறிப்பாக மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்தைப் பெற்ற மதுரை மல்லிகை, மதுரை மட்டுமன்றி அண்டை மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள் இருப்பதால், மதுரை விமான நிலையம் மூலமாக வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

மதுரை மல்லி கிலோ ரூ.3500; கார்த்திகையால் விலை உயர்வு..

இந்நிலையில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு மதுரை மல்லிகையின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. இன்று கிலோ ரூ.3500க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிச்சிப்பூ ரூ.1500, முல்லை ரூ.1500, சம்பங்கி ரூ.300, செண்டு மல்லி ரூ.80, பட்டன் ரோஸ் ரூ.250 உட்பட பிற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது.

இதுகுறித்து மாட்டுத்தாவணி சில்லறை பூ வியாபரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில்,”இந்த ஆண்டின் வளர்பிறை கடைசி முகூர்த்தம் என்பதாலும், தொடர்ந்து பெரிய கார்த்திகை திருவிழா என்பதாலும் பூக்களின் விலையில் கணிசமான ஏற்றம் காணப்படுகிறது. இதே விலை அடுத்த சில நாட்கள் நீடிக்கும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:’வெண்ணிலா கபடி குழு' நடிகர் ஹரி வைரவன் காலமானார்!!

ABOUT THE AUTHOR

...view details