தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை, ஹைதராபாத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

மதுரையிலிருந்து கச்சிக்குடாவுக்கு (ஹைதராபாத்) வாராந்திர சிறப்பு ரயில் இயக்க தெற்கு மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

மதுரையில்
மதுரையில்

By

Published : Oct 28, 2022, 6:42 AM IST

மதுரை : வண்டி எண் 07191 கச்சிக்குடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் கச்சிக்குடாவிலிருந்து நவம்பர் 7 முதல் டிசம்பர் 26 வரை திங்கட்கிழமைகளில்
இரவு 08.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 08.45 மணிக்கு மதுரை வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 07192 மதுரை - கச்சிக்குடா வாராந்திர சிறப்பு ரயில் மதுரையிலிருந்து நவம்பர் 9 முதல் டிசம்பர் 28 வரை புதன் கிழமைகளில் அதிகாலை 05.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மறுநாள் காலை 07.05 மணிக்கு கச்சிக்குடா சென்று சேரும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம் விருத்தாச்சலம் விழுப்புரம் திருவண்ணாமலை காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நளகொண்டா, மல்காஜ்கிரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, ஒரு குளிர் சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 5 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.

இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு நாளை (28.10.2022) இன்று 08.00 மணிக்கு தொடங்கும் என தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க :என்ஐஏவுக்கு தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கும்: டிஜிபி சைலேந்திர பாபு

ABOUT THE AUTHOR

...view details