நெல்லையைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. 2008ஆம் ஆண்டில் அவரது வீட்டு மாடியில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது வாயினுள் துண்டை திணித்து, நைலான் கயிறால் கழுத்தை நெரித்து, கொலை செய்திருந்தது காவல் துறையின் விசாரணையில் தெரியவந்தது.
காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், இந்த படுகொலையை வசந்த், ராஜேஷ் ஆகியோர் செய்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றம் கொலைக் குற்றம் உறுதிசெய்யப்பட்ட ராஜேஷ், வசந்த் இரண்டு பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. காவல் ஆய்வாளர் தரப்பில் இந்தத் தண்டனையை உறுதி செய்யக்கோரி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.