தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் ஐடி அதிகாரிகளை தாக்கிய வழக்கு: காவல் ஆய்வாளர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின் போது, பணி செய்ய விடாமல் தடுத்த 19 பேர் மீது வழக்கு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஜாமின் வழ்ங்கப்பட்டதையடுத்து அதனை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதின்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்த வழக்கை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வருமான வரி சோதணையில் காவல் ஆய்வாளரை ஆஜராக உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை
வருமான வரி சோதணையில் காவல் ஆய்வாளரை ஆஜராக உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை

By

Published : Jun 21, 2023, 9:28 PM IST

மதுரை: கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டனர். செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான கரூர் வீட்டில் வருமான வரித்துறையினரின் சோதனையின் போது, அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுக்க முயன்ற குற்றச்சாட்டில் 19 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 19 பேருக்கும் கீழமை நீதிமன்றம் ஜாமீன் மற்றும் முன் ஜாமின் வழங்கியது. இதனை எதிர்த்து 19 பேரின் ஜாமினையும் ரத்து செய்யக்கோரி வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் கரூர் மாவட்ட காவல் துறையினர் நீதிமன்றம் முன்பு ஆஜராகிப் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

வருமான வரித்துறையின் உதவி இயக்குநர் யோக பிரியங்கா,கிருஷ்ணகாந்த், மற்றும் ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசராவ் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர். அதில்,“கடந்த மே 25ஆம் தேதி முறைகேடு செய்ததாகக் கூறி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதணை செய்தோம். கரூரைச் சேர்ந்த அசோக்குமார், மாரப்ப கவுண்டர் குணசேகரன், சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோரது வீடுகளிலும் சோதனை செய்தோம்.

சோதனை நடைபெற்ற இடங்களுக்கு வெளியே ஏராளமானோர் கூடியிருந்த நிலையில் பல்வேறு கலவரச் சம்பவங்கள் நடைபெற்றன. நாங்கள் சோதனை செய்த உரிமையாளர்களிடம் கூட்டத்தை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு தெரிவித்தோம். ஆனால் அதனை மறுத்து வெளியே கூடி இருந்த நபர்கள் மிக மோசமான வார்த்தைகளில் வருமான வரி துறையினரை பேசினர். சிறிது நேரத்திற்குப் பிறகு உள்ளே நுழைந்த கூட்டம், வருமானவரி துறையினரான எங்களை தாக்கியதோடு பணி செய்ய விடாமலும் தடுத்தனர்.

கூட்டம் அதிகரிக்கவே, அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்தந்த இடங்களிலிருந்து சோதனையை கைவிட்டு வெளியேறிச் சென்றோம். இதனைத் தொடர்ந்து மீண்டும் மறுநாள் சிஆர்பிஎஃப் வீரர்களின் உதவியுடன் சோதனையை தொடர்ந்தோம். சோதனையின் போது இடையூறாகவும் பணியை செய்யவிடாமல் தடுக்கப்பட்டதையடுத்து புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் 19 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும், தலைமறைவாக இருந்தவர்களுக்கும் கரூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஜாமின் மற்றும் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட அவர்களுக்கு கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே வழக்கில் கைது செய்யப்பட்ட 19 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் அமர்வில் விசாரணையில் வந்தது.

இதனை விசாரித்த நீதிபதி இளந்திரையன், "வழக்கு தொடர்பாக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விரிவாக அறியவும், சோதனையின் போது காவல் துறையினர் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விளக்கம் வேண்டும் என்பதனால் கரூர் நகர காவல் ஆய்வாளர், தாந்தோணி மலை மற்றும் உதவி காவல் ஆய்வாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இது குறித்து விரிவாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:செந்தில் பாலாஜி மீதான ED-யின் மேல்முறையீட்டு மனு - உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

ABOUT THE AUTHOR

...view details