தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரம் சிஷ்யா பூங்கா தொடர்பான வழககு - உரிய ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு - விசாரணையை ஒத்தி வைத்த உயர்நீதிமன்றம்

ராமநாதபுரம் நகராட்சியின் கீழ் உள்ள சிஷ்யா பூங்காவை இடிக்காமல், தொடர்ந்து சிறுவர் பூங்காவாக நீடிக்க கோரும் வழக்கில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சியின் கீழ் உள்ள சிஷ்யா பூங்கா
ராமநாதபுரம் நகராட்சியின் கீழ் உள்ள சிஷ்யா பூங்கா

By

Published : Mar 10, 2022, 4:05 PM IST

மதுரை: ராமநாதபுரம் வெங்குளம் பகுதியை சேர்ந்த ராஜூ என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், இராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் R.C. சரச் உள்ளது. இதன் அருகே ராமநாதபுரம் நகராட்சி சார்பில் சிஷ்யா என்ற பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பத்தாம் தேதி நகராட்சி நிர்வாகம் சார்பில் பூங்காவில் உள்ள மரங்களை வெட்டினர். மேலும், அங்கிருந்த குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களை அகற்றினர். இதுகுறித்து விசாரித்தபோது இந்த பூங்காவில் புதிதாகக் கட்டிடம் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தனர். இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குழந்தைகளுக்காக, ஒரே விளையாட்டு மையமாக இந்த பகுதி மட்டுமே உள்ளது. பூங்கா உள்ள இடத்தில் வேறு கட்டடங்கள் கட்டக் கூடாது என உள்ளது. எனவே ராமநாதபுரம் நகராட்சியின் கீழ் உள்ள சிஷ்யா பூங்காவில் அகற்றப்பட்ட விளையாட்டு உபகரணங்களை மீண்டும் பொருத்த வேண்டும். சிறுவர்கள் விளையாடுவதற்கான பூங்காவைத் தொடர்ந்து நீடிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்து மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதிஷ்குமார் அமர்வு முன் நேற்று (மார்ச்.9) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு, பூங்கா உள்ள இடத்தில் நூலகம் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 21 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:உ.பியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் யோகி ஆதித்யநாத்..

ABOUT THE AUTHOR

...view details