தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தர கோரிய வழக்கு தள்ளுபடி - மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

madras high court madurai bench: தேனியில் தலைமை காவலராக பணியாற்றி வந்த கணவர் காணாமல் போன நிலையில் அவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தர கோரிய வழக்கு தள்ளுபடி
காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தர கோரிய வழக்கு தள்ளுபடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 5:22 PM IST

மதுரை:தேனி மாவட்டத்தை சேர்ந்த கலாதேவி, உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ தனது கணவர் அழகுமுருகன் வருசநாடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆனால் 8 ஆண்டு காலமாகியும் இதுவரை எனது கணவரை கண்டுபிடித்து தரவில்லை, மேலும் அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. எனவே காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிங்க:பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல்: நீதிபதி சந்துரு தலைமையிலான குழு 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நிர்மல் குமார் அமர்வில் இன்று (ஆகஸ்ட் 24) விசாரணைக்கு வந்தது. இது குறித்து காவல்துறை தரப்பில், சிறப்பு குழு அமைத்து தேடும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 2013 ஆம் ஆண்டு காவலர் அழகுமுருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் முகாந்திரம் இல்லை எனவும், நீதிமன்றத்தின் நேரத்தை வீண் செய்ததாக மனுதாரருக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக ஆசிரியர் மீது புகார்.. பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details